தக்கலை, செப். 5 –
தக்கலை அருகே மணலிக்கரை பகுதியை சேர்ந்தவர் மணி (62) கூலி தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. 30 வருடங்களாக குடும்பத்தை பிரித்து தனியாக வசித்து வந்தார். இன்று தனது வீட்டின் முன் உள்ள கிணற்றின் மேல் மதுபோதையில் மணி அமர்ந்திருந்தார். அப்போது திடீரென தடுமாறி கிணற்றில் விழுந்தார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று மணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மணி தண்ணீர் மூழ்கினார். இந்த கிணறு சுமார் 40 அடி ஆழமாகும். உடனடியாக இது குறித்து தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சென்று கிணற்றுக்குள் இறங்கி மணியை மீட்டனர்.
பின்னர் நடந்த பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. உடனடி தக்கலை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். போலீசார் மணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


