தக்கலை, ஜுலை 12 –
தக்கலை அருகே கீழப்பறையன்கால் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகள் ஷாலினி (25). இவர் கேரளபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 4-ம் தேதி ஷாலினி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து சந்திரன் தக்கலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஷாலினியை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.