மார்த்தாண்டம், ஆக. 21 –
திருவட்டார் அருகே சித்திரம்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரவீன் ஜோஸ். இவர் உட்பட 6 பேர் மலேசியா மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா செல்ல திருவனந்தபுரத்தில் உள்ள டிராவல் ஏஜென்சியிடம் ரூபாய் 3 லட்சத்து 36 ஆயிரத்து 400 அளித்துள்ளனர். பணம் கொடுத்து ஓர் ஆண்டாகியும் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லவில்லை.
பணத்தை திருப்பி கேட்டும் திருப்பி வழங்கவில்லை. இதனால் 6 பேரும் திருவட்டாறு போலீசில் இன்று புகார் செய்தனர். போலீசார் நிறுவனத்தின் மேலாளர் ஆண்டனி அகஸ்டின் (40), உரிமையாளர் ஜாஸ்மின் ஈவில் (31) ஆகிய பெண் உட்பட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.


