சென்னை, ஜூலை 05 –
இந்தியாவின் வணிக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், புதிய டாடா – ஏஸ் ப்ரோவை சென்னையில் அறிமுகப்படுத்தியது. டாடா மோட்டார்ஸின் நிர்வாக இயக்குனர் கிரிஷ் வாக், “சிறிய சரக்கு போக்குவரத்தில் மிகவும் எளிதாக பயன்படுத்த கூடிய ரூ.3.99 லட்சம் தொடக்க விலையுடன், டாடா – ஏஸ் ப்ரோ இந்தியாவின் மிகவும் மலிவு விலை நான்கு சக்கர மினி டிரக் இதுவாகும். புதிய தொழில் முனைவோர் தேவைகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட டாடா – ப்ரோ, பெட்ரோல், எரிபொருள் மற்றும் மின்சார வகைகளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான டாடா – ஏஸ் ப்ரோ வகையை நாடு முழுவதும் உள்ள டாடா மோட்டார்ஸின் 1250 வணிக வாகன விற்பனைத் தொடர்பு மையங்கள் மற்றும் டாடா மோட்டரின் ஆன்லைன் விற்பனை தளமான ஃப்ளீட் வெர்ஸில் முன்பதிவு செய்யலாம். டாடா மோட்டார்ஸ், முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து வாடிக்கையாளர்க்கு நிதி சேவையில் துணை புரிகிறது.
இதன் வாயிலாக விரைவான கடன் வசதியுடன் தவணை முறையில் செலுத்தி வாகனங்களை சொந்தமாக்கி கொள்ளலாம். கடந்த இரண்டு தசாப்தங்களாக, இது 25 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோரை முன்னேற்றம் காண வைத்திருக்கிறது என்று தெரிவித்தார்.