கிருஷ்ணகிரி, ஜுலை 28 –
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் எம்எல்ஏ ஆணைக்கிணங்க, ஜெகதேவி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டிற்கான புதிய மின் கம்பம் தெருவிளக்கு அமைக்கும் பணிக்கு இடங்களை பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், குமரேசன், உதவி பொறியாளர் பூம்பாவை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன், ஊராட்சி செயலாளர் செங்கதிர் செல்வன் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் உதவி பொறியாளர் சரவணன், வணிக ஆய்வாளர் செந்தில் ஆகியோர் பணிக்கான இடங்கள் ஜெகதேவி ஊராட்சி அம்பேத்கர் நகர், காமாட்சிபுரம், சாமிநாதன் நகர், ஜிட்டோப்பனப்பள்ளி, பாகிமானூர், சாப்முட்லு, கே.கே. நகர், தண்ணீர் பள்ளம் உள்ளிட்ட இடங்களை தேர்வு செய்து பணிகளை மேற்கொண்டனர். தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே. கிருபாகரன், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ் (எ) ராஜதுரை, வல்லரசு, கோபி, ராஜேஷ், வேலு, ராமமூர்த்தி, அனீஸ் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.