கிருஷ்ணகிரி, ஜுலை 9 –
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் பர்கூர் ஜெகதேவி ரோடு எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள அருள் பாலித்து வரும் ஸ்ரீ முத்து மாரியம்மன், ஸ்ரீ கங்கையம்மன், ஸ்ரீ நாகம்மன் ஆகிய ஆலய பிரதிஷ்டபன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர் கோவிந்தராஜ், மந்திரி கவுண்டர் மாதேஷ், கவுன்சிலர் ஜீவா துரைசாமி, சீனன், ராதா பெருமாள், சங்கர், சுரேஷ், முருகன், பன்னீர் செல்வம், தேசிங்கு ராஜா மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் காந்தி, சிவகார்த்திகேயன், ஆர். ரமேஷ், ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.