சென்னை, ஜூலை 08 –
சென்னை முகப்பேர் மேற்கு 1-வது அவென்யூவில் ஜி.பி.எஸ் சிஸ்டம் & சர்வீஸ் லெனோவா விற்பனை மற்றும் சேவைகள் ஷோரூமை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக கட்சியின் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் நயினார் நாகேந்திரன் ஜிபிஎஸ் லெனோவா ஷோரூமை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.
ஜி.பி.எஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நாகேந்திரன் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவருடைய நிறுவனத்தின் 54-வது கிளையை சென்னை முகப்பேரில் திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஜி.பி.எஸ் லெனோவா சர்விஸ் கிளைகள் செயல்பட்டு வருகிறது. இவர் மேன்மேலும் இத்தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்தினார்.