கிருஷ்ணகிரி, ஆக. 11 –
சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியினை வாசிக்க கிருஷ்ணகிரி, போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் , பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை ஆகியோர் முன்னிலையில் அரசு மருத்துவ மற்றும் கலைக்கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், உதவி ஆணையர் (ஆயம்) பழனி, அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் (பொ) மரு. சந்திரசேகர் மற்றும் மாணவ மாணவியர்கள் உள்ளனர்.



