கிருஷ்ணகிரி, ஜுலை 9 –
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சூளகிரி கிழக்கு ஒன்றியம் செம்பரசனப்பள்ளி ஊராட்சி
கொரலதொட்டி கிராமத்தில் ஒரு வருடங்களாக குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். பலமுறை ஆளுகின்ற ஆளுங்கட்சி விடியா திமுக அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளரிடம் பல முறை கோரிக்கைகளை வைத்து விடியா திமுக அரசு நிறைவேற்றவில்லை.
இது குறித்து அதிமுக ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான எல். செல்வத்திடம் கொரல தொட்டி கிராம மக்கள் தங்கள் ஊரில் ஒரு வருடங்களாக குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறினர். உடனடியாக என்னுடைய சொந்த செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கிறேன் என்று கூறி உடனே ஒன்றிய கழக செயலாளர் எல். செல்வம் அப்படியே போர்வெல் வண்டியின் மேனேஜர்க்கு போன் செய்து அந்த கிராமத்தில் சென்று ஊர் மக்கள் காட்டும் இடத்தில் பயிண்டு ஓட்டி கொடுங்கள் என்று தொடர்பு கொண்டு உத்தரவிட்டார். உடனடியாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அந்த கிராம மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சூளகிரி ஒன்றியத்தின் மக்கள் கூறியதாவது: ஏழைகளின் தலைவன் அதிமுக சூளகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சென்னப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் எல். செல்வம் அவரைப் போல ஒரு ஏழைகளின் தலைவர் பார்த்ததே இல்லை என்று கூறி செம்பரசனப்பள்ளி ஊராட்சி பொதுமக்கள் மற்றும் கொரலதொட்டி கிராமத்தை சார்ந்த ஊர் பொதுமக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.