கோவை, ஜூலை 18 –
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிய வணிக உலகம் 40 கடைகள் சுமார் 4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பணி முடிவடையும் தருவாயில் கடைகள் வணிக நிறுவனங்களில் பயன்பாட்டுக்கு ஏலம் பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது. ஏலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள், தொழிலதிபர்கள், புதிதாக தொழில் தொடங்க இருப்பவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் கூறினார்கள். முன்னதாக ஏலத்தில் கலந்து கொள்ள கூடியவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், பேரூராட்சி நடைமுறைகள், அரசு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு ஏலம் நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள் போட்டி போட்டுக் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்ற வகையில் தொகைகளை கூறினார்கள். ஏலத்தினை சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், கண்ணம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், ஒத்தக்கால் மண்டபம் செயல் அலுவலர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஏலத்துக்கான ஏற்பாட்டினை பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், துணை தலைவர் கணேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் சிறப்பாக செய்தனர்.