சுசீந்திரம், ஆக. 7 –
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் உட்பிரகாரம் வடக்கு பகுதியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உடைய விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு மாதம் தோறும் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அதிகாலை அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி அங்கி முழு உடலிலும் சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெறுவது வழக்கம். அதுபோல நேற்று மூல நட்சத்திரம் என்பதால் ஆஞ்சநேயருக்கு அதிகாலை பால், தயிர் உட்பட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்பு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு துளசி மாலை அணிவித்து விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. நேற்று மாலை பிரதோஷம் என்பதால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி பெருமாள் மூன்று முறை கோயில் உட்பிரகாரத்தை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு சுவாமிகளுக்கு அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமன்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு கலந்து சாமி தரிசனம் செய்தனர்.