சுசீந்திரம், அக். 2 –
சுசீந்திரம் அருகே உள்ள பதினெட்டாம்படியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகள் எழில் சுவேதா (15). இவர் இடலாக்குடி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருவதாகவும் இவருடைய அப்பா பாபு வழக்கு ஒன்றில் சாட்சியாக சுசீந்திரம் அருகே உள்ள ஆசிரமம் ஆஞ்சநேயர் நகர் பகுதியை சேர்ந்தவர் பால் சிங் (38), ஆட்டோ டிரைவர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று எழில் சுவேதா பதினெட்டாம்படி ரெயில்வே கிராசிங் அருகே டியூசன் முடித்து வந்து கொண்டிருக்கும் பொழுது பால்சிங் ஆட்டோவை ஓட்டி வந்து இடது கால் விரலில் ஏற்றி தகாத வார்த்தை பேசி என்னைக்கு இருந்தாலும் உன் சாவு என் கையில் தான் என்று மிரட்டி சென்றதாக எழில் சுவேதா சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.


