ராமநாதபுரம், ஆக. 8 –
ராமநாதபுரம் சுகம் வைத்தியசாலை மற்றும் ராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி இணைந்து இலவச ஆயுர்வேத சித்த மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை முகாம் நடத்தினர். ராமநாதபுரம் பட்டணம்காத்தான் சுகம் வைத்திய சாலையில் நடைபெற்ற இலவச ஆயுர்வேத சித்த மருத்துவ சிகிச்சை முகாமில் சித்தா ஆயுர்வேதா, வர்மா, யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் மற்றும் வர்ம வைத்தியர் பாத சிகிச்சை நிபுணர்கள், அக்குபஞ்சர் நிபுணர்கள் கலந்து கொண்டு முகாமில் பங்கேற்ற மக்களுக்கு நோய்கள் பற்றி அதை எவ்வாறு போக்குவது என்பது குறித்து ஆலோசனை வழங்கினர்.
இலவச ஆயுர்வேத சித்தா மருத்துவ முகாமை ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி ராம்நாட் தலைவர் பொறியாளர் மாரி, ரோட்டரி துணை ஆளுநர் சோமசுந்தரம், டாக்டர் காளிமுத்து ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் டாக்டர்கள் பொன்னம்மாள், சிந்து, விஷ்வா, பால அட்சயா ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்றவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கினர். முகாமில் 120 பேர் பங்கேற்று தகுந்த சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று சென்றனர். முகாமில் உயர்தரமான மாத்திரை, மருந்துகள் குறைந்த விலையில் 20 சதவீதம் தள்ளுபடியில் வழங்கப்பட்டன.