திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 30 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே திமுக நிர்வாகி மறைவையொட்டி படத்திறப்பு விழா நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திமுக கிழக்கு ஒன்றிய வர்த்தகர் அணி அமைப்பாளர் ஆடிட்டர் இராஜீவ்காந்தி. இவரது சகோதரியின் கணவர் சிறுவானூர் கிராமத்தை சேர்ந்த அரசன். திமுக நிர்வாகியான இவர் கடந்த 13-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையொட்டி படத்திறப்பு விழா அவரது சொந்த கிராமத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அ.ஜெ. மணிக்கண்ணன் கலந்துகொண்டு அவரது திருவுருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதில் ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் சுகந்தி இராஜீவ்காந்தி, வீராசாமி மற்றும் திமுக நிர்வாகிகள், முருகன், பைரவா, கண்ணன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.