வேலூர், ஜூலை 31 –
வேலூர் மாவட்டம், காட்பாடி சேவூரில் 4 கோடியே 77 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உள்ள சிறப்பு காவல் படை 15-வது அணியின் தளவாய் புதிய நிர்வாக அலுவலக கட்டிடத்தை சென்னையில் தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
இந்த விழாவில் தனி பிரிவு காவல் படை கண்காணிப்பாளர் செல்வமணி அனைவரையும் வரவேற்றார். துணை காவல் படை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் உதவி காவல் படை கண்காணிப்பாளர் நிர்மலா ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் காவல் படை அதிகாரிகள், உள்ளாட்சி பிரமுகர்கள் மற்றும் போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.