நாகர்கோவில், ஜூன் 30 –
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட கடுக்கரையில் இருந்து திடல் செல்லும் சாலையில் உள்ள அழகிய பாண்டிபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே மிகவும் ஆபத்தாக காணப்படும் சாலையில் குண்டும் குழியும் மற்றும் சாலையின் அருகே இரண்டு அடி பள்ளமும் இருப்பதால் தினமும் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அதில் விழுந்து காயமுற்று செல்கின்றனர்.
மேலும் சில நேரங்களில் லாரி மற்றும் பேருந்தின் சக்கரமும் சிக்கியும் விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாக அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பெரிய விபத்துக்கள் நடந்து உயிர் சேதங்கள் ஏற்படும் முன் பேரூராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதைந்து உருமாறி காணப்படும் சாலையை சரி செய்திட அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் சிவகுமார் கோரிக்கை.