மார்த்தாண்டம், செப். 11 –
குழித்துறை அருகே சிதறால் வட்டவளையை சேர்ந்த சத்ய மணி (54) தாமிரபரணி ஆற்றில் குளிக்க இன்று பிற்பகல் சென்றார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். குளிக்க சென்றவரை காணாததால் உறவினர்கள் குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் நிலை அலுவலர் சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கடைவிளை கடவு தாமிரபரணி ஆற்றில் தேடிப் பார்த்தபோது குளித்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஆற்றினுள் உள் புல்புதர் பகுதியில் புல் புதர்களை பிடித்துக் கொண்டு சத்தமிட்டு கொண்டிருந்தார். தீயணைப்பு வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.



