போகலூர், ஜுலை 7 –
சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூபாய் ஒரு கோடி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் 2025-ம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் விண்ணப்ப படிவத்துடன் அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்கலாம். இணையதளத்திலிருந்து இவ்விருதிற்கான விண்ணப்பத்தை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கான விண்ணப்பத்தினை ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜூலை 10-ம் தேதிக்குள் ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.