கிருஷ்ணகிரி, ஜூலை 15 –
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் ஆல்ப்ஸ் ஹோட்டல் ரெசிடென்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த 3 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து உரையாற்றினார்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் க்ரைம்) நமச்சிவாயம், மாநில மகளிர் ஆணைய குழு உறுப்பினர் மரு. மாலதி, மாவட்ட சமூக நல அலுவலர் சக்தி சுபாசினி உள்ளிட்ட பலர் உள்ளனர்.