தென்தாமரை குளம், ஜூலை 16 –
சந்தையடியில் ஊர் பொது மக்கள் சார்பில் நேற்று காமராஜர் பிறந்தநாள் விழா படிப்பகம் முன்பு கொண்டாடப்பட்டது. விழாவில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில் காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு செயலாளர் பால்ராஜ், அறங்காவலர்கள் சிங்காரவேல், பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவாஷ்கர் நன்றி கூறினார். அறங்காவலர்கள் ராஜலிங்கம், மணிகண்டன், ரகுபதி, துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.