தென்காசி, ஜூலை 21 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்கள் 1,2,3 ஆகிய பகுதி பொது மக்களுக்கான தமிழக அரசின் பல்வேறு சேவைகள் அனைத்து மக்களையும் நேரடியாக சென்றடைய தமிழ்நாடு முதல்வர் கொண்டு வந்துள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள ஏவிஆர்எம்வி திருமண மண்டபத்தில் வைத்து நடந்தது. இந்த முகாமினை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்த முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது. முகாமில் சங்கரன்கோவில் ஆர்டிஓ கவிதா, சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் (பொ) நாகராஜன், சுகாதார அலுவலர் வெங்கட்ராமன், சங்கரன் கோவில் திமுக நகரச் செயலாளர் மு. பிரகாஷ், சுகாதார ஆய்வாளர்கள் கருப்பசாமி, கைலாச சுந்தரம், விஏஓ செல்வகுமார், மின்வாரிய தொமுச திட்ட செயலாளர் மகாராஜன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.