சங்கரன்கோவில், நவம்பர் 10 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தமிழக அரசின் 2025 – 26ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2,000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் துவக்கி வைத்ததை தொடர்ந்து
இந்தத் திட்டத்தின் கீழ் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு சங்கரன்கோவில் திருப்பூர் குமரன் நகரை 70 வயதை கடந்த தம்பதிகள் முப்பிடாதி மற்றும் முப்பிடாதியம்மாள் ஆகியோர்களுக்கு சிறப்பு செய்தார். இத்தம்பதியினருக்கு வேட்டி மற்றும் சட்டை, புடவை, இரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் மற்றும் சுவாமி படம் ஆகியவை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், நகர செயலாளர் பிரகாஷ், கோயில் கண்காணிப்பாளர் சரவணபவன், பொறியாளர் முத்துராஜ், ஆய்வாளர் ராஜகோபால், திமுக ஐடி. விங்க் சிவசங்கரநாராயணன் மற்றும் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



