சங்கரன்கோவில், ஜூலை 30 –
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மக்களிடம் செல்; அவர்களோடு வாழ்; அவர்களை நேசி என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையின் படி உங்களுடன் ஸ்டாலின்
என்ற புதிய திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/ திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். நகர்ப்புறப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 13 துறைகள் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 15 துறைகள் 46 சேவைகள் மக்கள் எளிதாக பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை வரை பத்தாயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சங்கரன்கோவில் நகராட்சி 4,5 வார்டு பகுதி பொது மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் கீதாலயா தியேட்டர் ரோட்டில் உள்ள கோதை திருமண மஹாலில் வைத்து நடந்தது. இந்த முகாமினை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆய்வு செய்தார். தொடர்ந்து அதிகாரிகளிடம் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் மின்வாரிய நுகர்வோர் சார்பில் வழங்கப்பட்ட பெயர் மாற்றம் விண்ணப்பத்தின் அடிப்படையில் பாரதியார் 8-ம் தெருவைச் சார்ந்த பரமசிவன் மகன் சங்கரன் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதி பரமேஸ்வரி ஆகியோர்களுக்கு பெயர் மாற்றத்திற்கான உத்தரவு நகல்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ வழங்கினார்.
இதில் மாவட்ட அவைத் தலைவர் சுப்பையா, நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, தாசில்தார் பரமசிவன், மின்வாரிய நகர் உதவி பொறியாளர் கருப்பசாமி, சங்கரன்கோவில் தாசில்தார் பரமசிவன், நகராட்சி கவுன்சிலர்கள் வெங்கடேஷ், செல்வராஜ், ராஜா ஆறுமுகம், நகராட்சி கமிஷனர் சேம் கிங்ஸ்டன், சுகாதார அலுவலர் வெங்கட்ராமன், சுகாதார ஆய்வாளர்கள் கருப்பசாமி, கைலாசசுந்தரம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆனந்தராஜ் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.