திருப்பூர், ஜூலை 14 –
திருப்பூர் சக்கரவத்தி பிளாஸ்டிக் குழும நிறுவனர் ஏ.கே.எஸ் அருள் செல்வம் தனது மனைவி திருமதி மஞ்சுளாவின் பிறந்த நாளை முன்னிட்டு வித்தியாசமான முறையில் திரைப்பட பாடல் அவருக்கு பரிசு அளிக்க விரும்பினார். இதன்படி திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் பா. விஜய் அவர்களை வைத்து எஞ்சாமி நீதானே என் வாழ்வில் என்று தொடங்கும் பாடலை எழுதி அதனை அனுப்பர்பாளையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் வெளியீட்டு விழாவும் நடத்தி தனது மனைவிக்கு கௌரவித்துள்ளார்.
மேலும் இப்பாடலை வெளியீட்டு விழாவும் நடத்தி அதனை கிட்ஸ் கிளப்பள்ளி குழுமம் திருப்பூர் தமிழ் சங்கம் செயலாளர் மோகன் கார்த்திக் இதனை பெற்றுள்ளார். மேலும் இது ஒரு புதுவித அனுபவம் என கவிஞர் பா. விஜய் அவர்களும் பாடலை பெற்றுக் கொண்ட
திருப்பூர் மோகன் கார்த்திக் அவர்களும் தெரிவித்தனர்.