கோவை, ஆகஸ்ட் 03 –
கோவை மாவட்டம் எஸ் எஸ் குளம் ஊராட்சி ஒன்றியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின காணொளி காட்சி வாயிலாக நலம் காக்கும் ஸ்டாலின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிரியப்பனவர் எம் பி ராஜ்குமார் குத்து விளக்கு ஏற்றி வைத்து முகாமை துவக்கி வைத்தார்கள்.
முன்னாள் எம்பி நாகராஜ் மேயர் ரங்கநாயகி துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற முகாமில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை,பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம்,பல் மருத்துவம்,கண் மருத்துவம்,காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் ஆகிய அனைத்து மருத்துவம் இடம் பெற்று இருந்தது.
மேலும் இம்முகாவில் துணை மேயர் வெற்றிச்செல்வன் திமுக மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு ஆறுகுட்டி எம் என் கே செந்தில் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் மாவட்ட சுகாதார துரை இயக்குனர் பாலுசாமி இணை இயக்குனர் சுமதி குடும்ப நல அலுவலர் கௌரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி அனுராதா மற்றும ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மருத்துவத்துறை சிகிச்சைகளை எடுத்துக் கொண்டனர்.