கோவை, ஜூலை 28 –
கோவை மாவட்டம் கே.என்.ஜி.புதூர் பிரிவு அமிர்தா இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 15-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் கல்வியாண்டின் புதிய மாணவர்கள் வரவேற்பு விழா இன்ஸ்டியூட் கூட்டரங்கில் இன்ஸ்டியூட் சிஇஓ சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக லீ மெரிடியன் ஹெச்ஆர் மேலாளாலர் மேரி ஃபிளின்சி, கோவை மெர்லிஸ் ஹோட்டல் ஹெச்ஆர் இயக்குனர் ரெஞ்சித் தாமஸ், லீ மெரிடியன் கற்றல் மற்றும் மேம்பாடு ஆபிசர் ஸ்னோரிடா சில்வர்ஸ்டர், ஜோன் பைதி பார்க் ஹோட்டல் எக்ஸ்கியூட்டிவ் செஃப் கார்த்திகா, போலார் பீர் ஐஸ்க்ரீம் வடவள்ளி கிளை நிறுவனர் முகமது அப்ரார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
ஹோட்டல் துறையில் உயர் பொறுப்பு வகிக்கும் அமிர்தா இன்ஸ்டிடியூட்டின் முன்னால் மாணவர்கள் பூமணி, விஷ்ணு, காவ்யா, எம். விஷ்ணு, சுதோஷ் சௌஹான், குகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இவர்களுக்கு அமிர்தா இன்ஸ்டிடியூட் சார்பாக கெளரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக 5க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அமிர்தா இன்ஸ்டிட்யூட் சார்பாக மொரிசியஸ் நாட்டிற்கு செல்ல விசா வழங்கப்பட்டது.
சிஇஓ சுரேஷ் குமார் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மாணவர்கள் மத்தியில் பேசுகையில்: ஓட்டல் துறையில் உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே புதிய மாணவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, இன்று முதல் உங்கள் அனைவரையும் அமிர்தா இன்ஸ்டிட்யூட் நிறுவனம் சார்பாக வரவேற்கிறோம். அதே சமயத்தில் நன்றாக படித்து திறம்பட கற்றுக் கொண்டு அமிர்தா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டிற்கும் தங்களது பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை பேசினர்.
இந்நிகழ்ச்சியில் அமிர்தா பிளேஸ்மென்ட் அலுவலர் புவனேஸ்வரி மற்றும் மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.