ஈரோடு, ஜூலை 27 –
ஈரோடு மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் கார்த்தி முன்னிலை வகித்தார். கோவை கோட்ட பொது செயலாளர் கிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் செயலாளர் கள் சங்கர் முரளி ரமேஷ் கார்த்திகேயன் வினோத் குமார் மாவட்ட துணை தலைவர் சண்முகம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேவராஜ் கவின் பழனிவேல் சக்தி வேல் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.



