கோபிசெட்டிபாளையம், ஆக. 20 –
தென் மாநிலம் முழுவதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து விற்பனையில் சாதனை படைத்து வருகிறது ராம்ராஜ் காட்டன் நிறுவனம். பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் காப்பதில் அக்கறை கொண்டுள்ள இந்நிறுவனம் தமிழகத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் தனது ஷோரூம்களை திறந்து வெற்றி கண்டுள்ளது.
மேலும் உலகெங்கும் பரவியுள்ள தமிழருக்காய் www.ramrajcotton.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் விற்பனையை விரிவுபடுத்தியதோடு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்து வருகிறது.
ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி கோபி செட்டிப்பாளையம், ஈரோடு-சத்தி மெயின் ரோடு, கயல்விழி காம்ப்ளக்ஸ், கரட்டூர் ஆர்ச் அருகில், ஈரோடு – 638 476 என்ற முகவரியில் வாடிக்கையாளர்களுக்காக புதிய ஷோரூம் இன்று திறக்கப்பட்டது.
கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் K.A. செங்கோட்டையன் ஷோரூமை திறந்து வைத்தார். கோபிச்செட்டிபாளையம் அபி S.K. மருத்துவமனை இயக்குனர் Dr.S.குமரேசன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். கோபிச்செட்டிப்பாளையம் கயல் ஸ்போர்ட்ஸ் சென்டர் உரிமையாளர் K.P. கோட்டீஸ்வரன் முதல் விற்பனையைப் பெற்றுக் கொண்டார். விழாவிற்கு வந்திருந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் K.R. நாகராஜன் அன்புடன் வரவேற்றார். திருப்பூர் ஹீரோ ஃபேஷன் சுந்தரமூர்த்தி அவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டார்.



