நாகர்கோவில், செப். 12 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் அடுத்த கொடுப்பைக்குழி பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமிகள் கலந்து கொண்டு திருவிளக்கு பஜனை பாடல்கள் பாடி அம்பாளை வழிபட்டனர்.
பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் சௌபாக்கியங்கள் நிகழும் என்பதால் ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமிகள் அம்பாளை வேண்டி பஜனை பாடி வழிப்பட்டனர். மேலும் வண்ண வண்ண விளக்குகளால் கோயில் அலங்கரிக்கப்பட்டதை காணவும் ஏராளமான பொது மக்கள் பக்தர்களும் வருகை தந்தனர்.



