களியக்காவிளை, ஆக 5 –
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் முதலக்கரை மீனவர் காலணி பகுதியை சார்ந்தவர் அலக்ஸ்சாண்டர் மகன் சேவியர் (64). இவருக்கு திருமணமாகி மனைவி பிள்ளைகள் உள்ளனர். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். தற்போது குழித்துறை அருகே பனவிளை பகுதியில் தனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். உடல்நிலை சரி இல்லாத போதும் மது குடிக்கும் பழக்கம் உண்டு.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அவரது மகள் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடம் வந்து சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


