கன்னியாகுமரி மே 15
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முஸ்லிம் முஹல்ல வளாகத்தில் வைத்து புதிய ஜமாஅத் நிர்வாகிகள், செயற்குழு, பொதுகுழு உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஜமாஅத் கன்வீனர் பஷீர் கோயா தலைமை வகித்தார்.
முஸ்லிம் முஹல்ல முன்னாள் நிர்வாகிகள், மற்றும் குமரி மாவட்ட அனைத்து ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். குளச்சல் ஜும் ஆ பள்ளி இமாம் மௌலவி அப்துல் கலாம் ஜலாலி துவக்கவுரை நிகழ்த்தினார், எம்.எ.கான், ஜலாலுதீன், நியாஸ் அகமது, ஆரியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், குளச்சல் நகர் மன்ற தலைவர் அ.நசீர் ஏற்புரை வழங்கினார்.
குளச்சல் முஸ்லிம் முஹல்ல நிர்வாகிகள் விபரம் வருமாறு தலைவராக அ.நசீர், துணை தலைவராக சாதிக், செயலாளராக சுபுஹானி, துணைசெயலாளராக அன்வர் சாதத், பொருளாளராக நாகூர் கான் மற்றும் செயற்குழு, பொதுகுழு உறுப்பினர்களுக்கும் பதவியேற்பு செய்து வைத்தார் தலைமை இமாம் மெளலவி அப்துல் சலாம் ஜலாலி. இந்நிகழ்வில் சாதிக் நன்றியுரை நிகழ்த்தினார்.



