குளச்சல், ஜுலை 9 –
வில்லுக்குறி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி பிளஸ் டூ படிக்கும் மகள் உள்ளார். அந்தப் பெண் கணவரைப் பிரிந்து அதே பகுதியில் ஆக்கர் கடை நடத்தி வரும் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரே வீட்டில் மகளுடன் வசித்து வந்தார். சம்பவ தினம் பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. தாய் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் மாயமான பிளஸ் டூ மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வந்து சரணடைந்து தாயின் இரண்டாவது கணவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்வதால் தனது தாயின் உறவினர் வீட்டிற்கு சென்றதாக கூறினார். இதை அடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆக்கர் கடை உரிமையாளரை போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் இந்த வழக்கு குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் சிறையில் இருக்கும் இரண்டாவது கணவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதை அடுத்து போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.