மார்த்தாண்டம், செப். 29 –
குமரி மாவட்டம் குலசேகரத்தில் தும்பகோடு பகுதியில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தை நவீன பஸ் நிலையமாக அமைக்க தமிழ்நாடு அரசு 2.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று முன்தினம் மாலையில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பொன் ரவி, செயல் அலுவலர் விஜயகுமார், அரசு வழக்கறிஞர் ஜான்சன், முன்னாள் எம்எல்ஏ புஷ்ப லீலா ஆல்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



