மார்த்தாண்டம், ஜுலை 2 –
குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டெல்லா சரோஜம் ( 78). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. நேற்று முன்தினம் இவர் அங்குள்ள வங்கிக்கு சென்று தான் அடமானம் வைத்திருந்த 4 பவுன் நகையை மீட்டு மற்றும் ரூ.10 ஆயிரம், வங்கி பாஸ்புக்குகள், எடிஎம் கார்டுகள் உள்ளிட்ட ஆவணங்களை பையில் வைத்து பஸ்ஸில் ஏறி அவர் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது அவரது செல்போனில் ஆவணங்கள் அனைத்தும் புத்தன் சந்தை சந்திப்பு பகுதியில் கிடப்பதாக கூறியுள்ளனர். அப்போது நகை பணம் திருடப்பட்டது தெரிந்தது. இது குறித்து ஸ்டெல்லா சரோஜம் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.