குளச்சல், ஜூலை 11 –
குறும்பனை சகாய மாதா தெருவை சேர்ந்தவர் ஷாஜி. இவரது மனைவி கஜினி பிரியா (37). இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்று இரண்டாவது ஷாஜியை திருமணம் செய்து உள்ளார். இந்த நிலையில் திருமணத்தை பதிவு செய்வது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று ஷாஜி தனது உறவினர்களான டெய்சி (35), கீதா (35), மேரி (54) ஆகியோருடன் சேர்ந்து மனைவி கஜினி பிரியாவை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் மனைவியை தாக்கிய ஷாஜி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.