நாகர்கோவில், ஆக. 21 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைந்திருக்கும் முகாம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்திலிருந்து ஏராளமான விவசாய பெருமக்கள் வருகை தந்திருந்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள், பயிர் காப்பீடு திட்டத்தில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் உயிர் காப்பீட்டுக்கு உரிய உத்தரவாதம் சேர்க்கப்படவில்லை. பார்வதிபுரம் பகுதியில் ரயில் பாதைக்கும், நான்கவழி சாலைக்கும் இடையே இணைப்பு சாலை அமைக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அப்போது, உயர்மட்ட குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து இரு கோட்டாட்சியர்களும் ஏன் இதுவரை மாதாந்திர கூட்டம் நடத்தவில்லை. கடந்த கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்ததால் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் கூட்டத்தை புறக்கணிக்கிறாரா? கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன் ரூ.1 லட்சம் வழங்கும் முறை உள்ளது. ஆனால் ரூ.50000 மட்டுமே வழங்கப்படுகிறது. சில கூட்டுறவு சங்கங்களில் சொத்து பத்திரத்தை வாங்கி வைத்துகொள்கின்றனர் என விவசாய பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கூட்டத்திற்கு வாராததை தொடர்ந்து வெகு நேரம் காத்திருந்த விவசாயிகள் பகல் 12 மணியளவில் அதிகாரியிடம் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை வழங்கி,கூட்டத்தை புறக்கணித்து வெளியே நடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் விவசாய சங்கத்தினர் கூறுகையில்” மாவட்ட ஆட்சியர் அழகுமீனா விவசாயிகளை மதிப்பதில்லை, விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதில்லை.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணிப்பது, விவசாயிகளை பழி வாங்குவது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் விவசாயிகளை அழைத்து கௌரவிக்கவில்லை, அழைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர். மேலும் விவசாயிகள் வெளிநடப்பு செய்தது போன்று விவசாயிகள் கூட்டத்தை ஆட்சியர் புறக்கணித்து உள்ளார். இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்
என பாசன சங்க தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.



