திருவட்டார், ஆக. 9 –
குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்ஷன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், மாவட்ட இணை செயலாளர் மேரி கமலபாய், துணை செயலாளர்கள் சலாம் அல்போன்சாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவவரும், கழக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் எழுச்சி பயணமான மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார எழுச்சி பயணம் குமரி மாவட்டம் வரும் போது அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும் என்றும், கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள பூத் கமிட்டிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில அமைப்பு செயலாளரும், குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாருமான சின்னத்துரை பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. தமிழகத்தில் பணியாற்றும் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. எட்டு மாதத்தில் 5 போலீசார் வெட்டி கொல்லப்பட்டனர். இதுவரை தமிழகத்தில் எந்த ஆட்சியிலும் நடந்தது இல்லை. தினமும் பாலியல் வன்கொடுமை, பள்ளிகூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்த ஆட்சியை தமிழகத்தில் இருந்து விரட்டுவதற்கு பெண்கள் தயாராகி விட்டனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முதல்வரின் கட்டுபாட்டில் இல்லை குடும்ப ஆட்சியில் 3 அதிகார மையத்தின் கையில் உள்ளது. தமிழகத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று முதல்வருக்கே தெரியவில்லை. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் போதை பொருள்கள் அதிக அளவில் நடமாடுகிறது. தொடக்க பள்ளி அளவில் கூட மாணவர்களிடையே போதை பொருள்கள் சர்வ சாதரனமாக விற்கபடுகிறது. தமிழகம் முழுவதும் கனிம பொருள்கள் வெட்டி கடத்தப்படுகிறது இதனால் உள்ளூர் பகுதி மக்களுக்கு கனிமவள பொருள்கள் கிடைக்கவில்லை. கட்டிடம் வீடுகள் கட்டுவதற்க்கு முடியவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் முடக்கப்பட்டு உள்ளது. ஏழை குடும்பத்தார் அதிக விலை கொடுத்து சிமெண்ட் வாங்க வேண்டிய நிலை உள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடவுள் மறுப்பு கூறி வருகிறார். ஆனால் அவரது மனைவி துர்கா ஒவ்வொரு இந்து கோவில்களில் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அந்த ஆண்டவனே இந்த ஆட்சியை காப்பாற்ற மாட்டார்கள் அந்த அளவிற்க்கு தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது. தனது மகன் உதயநிதி ஸ்டாலினை தான் அடுத்த முதல்வர் ஆக்க மு .க ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அரசு ஊழியர்கள் தினமும் தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் தேர்தல் அறிவிக்கையில் அறிவித்த அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் தமிழக முதல்வர் ஒவ்வொரு பகுதியாக சென்று நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி மாணவர்களை நம்ப வைத்தனர் இதை நம்பி ஒட்டு போட்ட மாணவர்களின் கனவு கேள்வி குறியாக உள்ளது. திமுக ஆட்சியால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது வரும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது இதை தான் மீண்டும் கொண்டு வருவார்கள் எனவே மாணவர்கள் கவணம்மாக இருக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில்தான் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்த பிறகுதான் இன்று அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு டாக்டர் படிக்கும் வாய்ப்பு கிடைத்து. அனைத்து அரசு அலுவலங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. எந்த அலுவலங்களிலும் லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் எதுவும் நடைபெறாது. முதியோர்களுக்கு மாத உதவி தொகை பெறுவதற்கான ஆணை வழங்கிய பிறகும் சுமார் 18 மாதங்களாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு அரசு மருத்துவர்கள் இல்லை இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தென் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மக்களை காட்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழச்சி பயணத்தில் மக்கள் அலைகடலென திரண்டு வந்ததே இதற்கு சாட்சி. இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் அணி செயலாளர்கள் சக்கீர் உசேன், ரஞ்சித்குமார், கிளாடிஸ்லில்லி , யூஜின்,ஒன்றிய செயலாளர்கள் ஜீன்ஸ், மெர்லின்ட்தாஸ், நிமால், மணி, நகர செயலாளர்கள் மணிகண்டன், அழகுராஜா, பேரூர் செயலாளர்கள் மோகன்குமார், விஜுகுமார், ஜெஸ்டின்ராஜ், ரவீந்திரன், ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.