நாகர்கோவில், ஆகஸ்ட் 7 –
நாடு முழுவதும் வருகிற 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் சிவசேனா, இந்து மகா சபா மற்றும் இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் நடத்திய பின்னர் நீர் நிலைகளுக்கு ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பான முறையில் நடைபெறும் வகையில் நேற்று மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது போலீஸ் தரப்பில் மாசுக்கட்டுப்பாடு துறை அறிவுறுத்தி உள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
புதிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது. உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதை அடுத்து இந்து நிர்வாகிகள் தரப்பிலும் சில கோரிக்கைகள் வைத்து பேசினார். இதில் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.