கீழக்கரை மே 06-
மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் விடுத்துள்ள செய்தியில் கூறி இருப்பதாவது,
கீழக்கரை நகராட்சி பகுதியில் நாய்களால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் கால்நடைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது இந்த நகரில் தொடரும் அவலமான இருந்து வருகிறது.
இந்த நாய்களை பிடித்து அகற்ற பல்வேறு சமூக,சமுதாய அமைப்புகள்,அரசியல் கட்சிகள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் கீழக்கரை நகராட்சி நிர்வாதத்தை கேட்டு கொண்டால் இன்று வரை செவிடன் காதில் ஊதிய சங்காகவே மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் இருந்து வருகிறது.
நாய்கடியால் கீழக்கரை அரசு மருத்துவமனை மற்றும் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் தினம் சராசரியாக ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் உள் மற்றும் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருவது வேதனை தரும் செய்தியாக உள்ளது.
இந்த நாய்களின் சத்தத்தால் இரவு நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவில் தூக்கம் இன்றி தவிர்த்து வருகின்றார்கள்.
நாய்கள் கடியால் பல்வேறு கால்நடைகள் பாதிக்கப்படுவதோடு சில கால்நடைகள் உயிர் இழந்தும் இருக்கிறது.
எனவே! பொதுமக்கள் நலன் கருதி கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து அரசு விதிப்படி அகற்ற எங்கள் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாகவும்,கீழக்கரை பொதுமக்கள் சார்பாகவும் கேட்டு கொள்கின்றோம்.இவ்வாறு தனது செய்தியில் கூறியுள்ளார்.