திண்டுக்கல், ஜூலை 02 –
கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டமானது திண்டுக்கல் தனியார் திருமண மண்டபத்தில் மாரம்பாடி ஆரோக்கியராஜ் அவர்களின் தலைமையிலும் அம்மாபட்டி ஜஸ்டின் திரவியம், முத்தழகுப்பட்டி அற்புதமணி அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டியாக செயல்பட்டு கொண்டிருந்த கூடிய சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
மாநில ஆலோசர்களாக திருமிகு ஆரோக்கியராஜ் அவர்களும் திருமிகு ஜஸ்டின் திரவியம் அவர்களும் மாநிலத் தலைவராக மைலாப்பூர் வேளாங்கன்னி, மாநில பொதுச் செயலாளராக திருமிகு ராயப்பர் ரமேஷ், மாநில பொருளாளராக திருமிகு ராக்சன், துணைத் தலைவர்களாக திருமிகு ஸ்டீபன், திருமிகு யாக்கோபு, துணைச் செயலராக திருமிகு ஜஸ்டின் பால்ராஜ், திருமிகு ஜான் பீட்டர் ஆகியோர் சங்க மாநில ஆலோசகர் அற்புத மணி அவர்களால் நியமனம் செய்யப்பட்டனர்.
தங்களின் பணியை அதி சிறப்பாக செய்தவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மாபெரும் மாநாட்டை மிகப்பெரிய வெற்றி மாநாடாக நடத்துவதற்கு ஒத்துழைத்த அனைத்து உறவுகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.