கிருஷ்ணகிரி, அக். 1 –
அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மனுக்கு 37ம் ஆண்டு திருமண விழா கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் பின்புறமாக உள்ள ஸ்ரீ குகை காளியம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக முதல் நிகழ்ச்சியாக எல்லையம்மனுக்கு மஞ்சள் நலுங்கு வைத்து நடைபெற்ற இந்த விழாவின் இறுதி நாளான நேற்று முதல் நிகழ்ச்சியாக காலை பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பரசுராமன் என்கின்ற சிவராமன் சார்பில் எல்லையம்மனுக்கு தாய்பூங்கரகம் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், தீச்சட்டி எடுத்தல், தமிழ்நாடு பூங்கரகம், கர்நாடகா பூங்கரகம், ஆந்திரா பூங்கரகம், உள்ளிட்டவை நடைபெற்றன. மிக விமர்சையாக நடைபெற்ற தீச்சட்டி ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு திருமண விழா சிறப்புடன் நடைபெற்றது.
முருகன் சுவாமிகள் நல்லாசியுடன் நடைபெற்ற இந்த எல்லையம்மன் திருமண நிகழ்ச்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீச்சட்டி கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த எல்லை அம்மனின் திருமண விழாவில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்று இரவு நடைபெற்ற அம்மனின் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன், மிகவும் பிரசித்தி பெற்ற இந்த குகை காளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அனைவரும் வருக வருவதைப் பார்த்து தம் மெய் சிலிர்த்து போவதாகவும் மேலும் இந்த குகைகாளியம்மன் கோவிலுக்கு வருபவருக்கு நல்லது நடப்பதை நான் உணர்வு பூர்வமாக உணர்ந்ததாகவும் தெரிவித்தார். இதுபோன்ற சக்தி வாய்ந்த அம்மனை பொதுமக்கள் வழிபட்டு சென்று தங்களது கோரிக்கையை அம்மனிடம் வைத்து நிறைவேற்றிக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த சிறப்பான நிகழ்ச்சியை கோவில் நிர்வாக நாகராஜா, முருகன் பாக்யா, ராம்குகைக்காளி, திருப்பதி, மற்றும் கிருஷ்ணகிரி லைன்கொல்லை ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சிறப்பாக செய்திருந்தனர். பல ஆயிரக்கணக்கில் இந்த எல்லையம்மன் திருமண விழாவில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஆந்திரா கர்நாடகாவைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர். சமூக நுகர்வோர் சங்க நிர்வாகி ஜெய்சன் உடன் இருந்தார்.



