கிருஷ்ணகிரி,மே.6-
கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கரையில் அமைந்துள்ள சுமார் 834 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு. காலபைரவர் சுவாமி திருக்கோவிலின் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் நடைப்பெறுவதை யொட்டி அத்திமர பலாலயம் யாகம் வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது. சிவாச்சாரியர்கள் முன்னிலையில் நடைப்பெற்ற இந்த சிறப்பு யாகத்தின் முன்பாக தீர்த்த கலசங்களுக்கு மலர்களால் லட்சார்சனைகள் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோவில் முன்பாக அமைகப்பட்டு இருந்த யாக குண்டத்தில் வீர சைவ ஆகம விதிகளின் படி சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்கியவாறு கணபதி ஹோமம், வாஸ்து ஹோம், புன்னிஸ்தான ஹோமம், பூரணாதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு விதமான ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் தீர்த்த கலசம் மற்றும் அத்திமரப் பலகையில் வடிவமைக்கப்பட்ட காலபைரவர், வினாயகர், அஷ்டலட்சுமி, நந்தீஸ்வரர் ஆகிய சுவாமிகளான ஊர்வலமாக எடுத்து சென்று ஏரிக்கரையில் அமைந்துள்ள ஆத்திமரத்தின் அடியில் வைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமியை தரிசனம் செய்த அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறைசெயல் அலுவலர் சிவா, ஆய்வாளர் அண்ணாதுரை,எழுத்தர் கார்த்திக், கோவிலின் அறக்கட்டளைத் தலைவர் வேலாயுதம் , கெளரவரத் தலைவரும், முன்னாள் அறங்காவலர் குழு தலைவருமான பி. சி.சேகர், அறக்கட்டளையின் தர்மகர்த்தாக்கள் பி. கிருஷ்ணமூர்த்தி, கே. பைரஸ்,துணைத் தலைவர் மீசை பைரன், பொதுச் செயலாளர் ஜெயராமன், பொருளாளர் சங்கர்,நிர்வாக இயக்குனர்கள் சுப்பிரமணி ஆச்சாரி, கிருஷ்ணன், தலைமை ஆசிரியர் ரமேஷ், முருகன் ஆச்சாரி, வழக்கறிஞர் பி.ஆர். ஜி.ரம்யா புருசோத்தமன், கோவில் பூசாரிகளான சாந்தகுமார், ஹரி,மற்றும் குரு உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.