கிருஷ்ணகிரி, அக். 2 –
கிருஷ்ணகிரியில் மனிதநேய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் முஜீபுர் ரகுமான் தலைமை தாங்கினார், மாநில பொருளாளர் முகமது உசைன் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சிக்கு மாநில துணை செயலாளர் முகமது இம்ரான் ஃபைஸ், மாநில துணைச் செயலாளர் சையயதுஅபுதாஹிர் ஆகியோர் முன்னில வைத்தனர்.
நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக மக்கள் கண்காணிப்பகம் இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஹென்றி திபென் சிறப்புரையாற்றும்போது வழக்கறிஞர்கள் துணிவுடன் நேர்மையுடனும் பணியாற்ற வேண்டும். மேலும் காவல் நிலைய மரணங்களை தடுத்திட வழக்கறிஞர்களால் முடியும். வழக்கறிஞர்கள் சமூக பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார். செய்தியாளர்களிடம் பேராசிரியர் ஜவாஹிருல்லா பேசும்போது பொறுப்பற்ற முறையில் நடிகர் விஜய் நடந்து கொள்கிறார். மேலும் விஜயை இயக்குவது பாஜகதான் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் அப்துல்சமது, பொருளார் கோவை உமர் பாதுஷா, பொது செயலாளர் ஹாஜா கனி, துணைப்பொது செயலாளர்கள் யாக்கூப், பாதுஷா, மாநில அமைப்பு செயலாளர் ஷேக் முகமது அலி, மூத்த வழக்கறிஞர் அன்வர் தர்மபுரி மாவட்ட தலைவர் சுபைதார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முடிவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் நூர்முகமது நன்றி கூறினார்.



