கிருஷ்ணகிரி, ஜூலை 9 –
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை உட்கோட்டம், தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமளாபுரம் கிராமத்தை சேர்ந்த ரத்தினம்மா (48) W/o பிலப்பா என்பவரை கடந்த 02.12.2022-ம் தேதி அவரது கணவரின் தம்பி கோபால் @ மட்டப்பா (51) S/o அனுமப்பா என்பவர் நிலப்பிரச்சனை காரணமாக கொலை செய்தது சம்மந்தமாக இறந்து போன ரத்தினம்மாவின் கணவர் பிலப்பா(53) S/o அனுமப்பா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தளி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அப்போதைய காவல் ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்களால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு எதிரி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 08.07.2025-ம் தேதி இவ்வழக்கின் எதிரி கோபால் @ மட்டப்பா என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூபாய் 1,000/- அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், எதிரி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளார். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காவல் கண்காணிப்பாளர் தங்க துரை பாராட்டினார்.