ஈரோடு, ஆக. 25 –
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மாணவ, மாணவியர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் மூலமாக 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தமிழக தனியார் பள்ளியில் பயின்று மாணவ, மாணவியர் தொடர்ந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் சேர்ந்து பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு இளங்களை மற்றும் அறிவியல், தொழில் நுட்ப கல்வி, பொறியியல், மருத்துவம், துணை மருத்துவம், டிப்ளமோ, ஐடிஐ, ஆரம்பக் கல்வியில் பட்டயப்படிப்பு, சட்டம், விவசாயம் சார்ந்த படிப்புகளை கல்லூரியில் பயில்பவர்களுக்கு கல்லூரி வாயிலாக விண்ணப்பித்தது முதல் உயர்கல்வி படிப்பதற்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவியர்கள் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறலாம். ஈரோடு மாவட்டத்தில் 2025 ஆகஸ்ட் மாதம் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 10,797 மாணவியர்களும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 10,627 மாணவர்களும் ரூ.1000 பெற்றுள்ளனர். மேலும், இதுவரை புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3,22,313 மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் ரூ.32,23,13,000 பெற்றும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 1,62,531 மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் பயனடைந்துள்ளனர்.



