திருப்பத்தூர், ஆகஸ்ட் 01 –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சியின் வாயிலாக சுற்றுலாத்துறையின் சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலை ஊராட்சி அத்தனாவூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நுழைவுப் பகுதி, உணவகக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய சாகச சுற்றுலாத்தலத்தை திறந்து வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து திருப்பத்துர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலை ஊராட்சி அத்தனாவூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜி ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். உடன் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்யா சதிஷ்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சிந்துஜா, சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.