கோவை, ஜூன் 30 –
கோவை தமிழ் இலக்கியப் பாசறை சார்பில் மறைந்த கவிஞர் கண்ணதாசனின் 98 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. கோவை அடுத்த வெள்ளக்கிணறு லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறந்த கவி ஆளுமைகளுக்கு விருது வழங்குதல், மாபெரும் கவியரங்க நிகழ்ச்சி மற்றும் கண்ணதாசன் புகழ் பாடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோவை தமிழ் இலக்கியப் பாசறை பொதுச் செயலாளர் டாக்டர். கோவை கிருஷ்ணா தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பல்கீஸ் உம்மா அனைவரையும் வரவேற்று பேசினார். முனைவர் மா. இளங்கீரன், சாவித்திரி, ராமகிருஷ்ணன், சித்ரா, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டாம்பூச்சி இலக்கிய குழும ஒருங்கிணைப்பாளர் மற்றும் பட்டாம்பூச்சி FM ஒருங்கிணைப்பாளர் கவிஞர். பொள்ளாச்சி முருகானந்தம் அவர்களுக்கு “கவிச்சிறகு விருதினை” கோவை ரூபி மெட்ரிக் பள்ளி தாளாளர் முதல்வர் சுகுமார், கற்பக ஜோதி, கோவை சிபி ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் முனைவர் அரங்க கோபால் ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து நாடக ஆசிரியர் மருதூர் கோட்டீஸ்வரன் சுபஸ்ரீனிவாசன், புலவர் மாரியப்பன், கவிஞர் இரா. பூபாலன், அம்சப்ரியா, கவிஞர் நறுமுகை, கவிஞர். தமிழ் நிலா, வே. சண்முகதேவி, முனைவர் அன்வர் பாட்ஷா உள்ளிட்ட கவிஞர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
ஐந்திணைச் தமிழ் சங்க தலைவர் கவிஞர் மருத்துவர் தேவி, செம்மொழித் தமிழ் மன்ற நிர்வாகி கவிஞர் கீதா தயாளன், வாகை வாசகர் வட்ட தலைவர் வாகை துரைசாமி
உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கவியரசு கண்ணதாசன் பிறந்தநாளை போற்றும் வகையில் இலக்கிய அமைப்பின் தலைவர் பூ.அ. ரவீந்திரன் தலைமையில் முன்னணி கவிஞர்கள் பங்கு பெற்ற கவிஞர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவில் தமிழ் இலக்கிய பாசறை இணைச் செயலாளர் கவித்திலகம் சுப சீனிவாசன் நன்றி கூறினார்.