களியக்காவிளை, ஜூன் 8 –
களியக்காவிளை அருகே மெதுகுமெல் தட்டான்விளை பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் அவரது மகன் அசோக் (31). எல் ஐ சி அட்வைஸராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அசோக் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார்.
திருமணம் நடைபெறாமல் இருந்ததால் மிகுந்த மன வேதனையில் இருந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து களியக்காவிளை போலீசார் அவரது உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


