களியக்காவிளை, ஜூன் 30 –
களியக்காவிளை அருகே அடைக்காக்குழி பகுதியை சேர்ந்தவர் புஷ்பாகரன் (63). இவர் கடுவாக்குழி சந்திப்பில் டீக்கடை வைத்துள்ளார். அதே பகுதி மண்ணான் விளையை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். ஆட்டோ டிரைவர். நேற்று கிறிஸ்துதாஸ் தனது ஆட்டோவில் கடுவாக்குழி சந்திப்புக்கு வந்தார். அப்போது புஷ்பா கரன் நடத்தும் டீக்கடை முன்பு ஆட்டோவை நிறுத்தினார். கடை முன்பு இடையூறாக நிறுத்திய ஆட்டோவை அங்கிருந்து அப்புறப்படுத்தமாறு கிறிஸ்துதாசிடம் புஷ்பாகரன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிறிஸ்துதாஸ் டீ கடைக்குள் புகுந்து பாத்திரங்களை கீழே போட்டு உடைத்து சேதப்படுத்தி சூறையாடியுள்ளார். இதனை தட்டிக் கேட்ட புஷ்பா கரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் டீக்கடையை சூறையாடிய கிறிஸ்துதாஸ் மீது களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.