களியக்காவிளை, செப். 2 –
களியக்காவிளை அருகே பளுகலில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட வாலிபர் தற்கொலை செய்துள்ளார். பளுகல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட மத்தம்பாலா மேல்பாலை, மாங்காலா பகுதியை சார்ந்தவர் ஜெபீஸ் (36). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஸரீகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். மீண்டும் வெளிநாட்டில் வேலைக்கு சென்ற ஜெபீஸ் அண்மையில் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளார்.
இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையுடன் குடிபழக்கமும் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தற்கொலை செய்துள்ளார். இது குறித்து இவரது மனைவி ஸரீகா பளுகல் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


